என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 9-ந்தேதி நடக்கிறது
    X

    காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 9-ந்தேதி நடக்கிறது

    காஞ்சீபுரம் காந்தி சாலையில் பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் வருகிற 9-ம்தேதி (வியாழன்) கும்பாபிஷேகம்நடைபெற உள்ளது.
    இந்தியாவில் முக்தி தரும் தலங்களாக ஏழு முக்கியத் தலங்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்த தலங்களில் முதன்மையான முக்தித்தலமாக காஞ்சீபுரம் கருதப்படுகிறது.

    காஞ்சீபுரம் நகரின் பிரதான சாலையான காந்தி சாலையில் பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் தேவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை இறைவன் நேரில் வந்து தீர்த்து வைத்ததாக புராணங்களில் கூறுகின்றன.

    இத்திருக்கோவிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினால் சட்டரீதியான வழக்குகள் மற்றும் குடும்ப பிரச்சனைகள் தீரும் என்ற ஐதீகம் உள்ளது. இதனால் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி செல்வர்.

    திங்கட்கிழமை தோறும் அதிகாலை முதலே ஆயிரம்கணக்காண பக்தர்கள் இக்கோவிலுக்கு வருவர்.

    இக்கோவிலுக்கு கடந்த 2014ம் ஆண்டு பக்தர்கள் நன்கொடையுடன் அறநிலையத்துறை சார்பில் புதிதாக ராஜகோபுரம் அமைத்து கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 74.40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டன. ரூ.42.40 லட்சம் கோவில் நிதியிலிருந்து ராஜகோபுரம் மற்றும் சுற்றுபிரகார மண்டபமும், பொது நிதி 18.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய முகப்பு மண்டபமும் மேலும் 14.40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய அன்னதான கூடமும் சீரமைக்கப்பட்டன. மேலும் பக்தர்களின் நன்கொடை மூலம் குளம் மற்றும் நவகிரக சன்னதிகள் உள்ளிட்ட வைகள் புதுப்பிக்கப்பட்டன.

    தற்போது திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் வருகிற 9-ம்தேதி (வியாழன்) கும்பாபிஷேகம் காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜைகள் 6ம்தேதி தொடங்குகின்றது. கும்பாபிஷேம் முடிந்த உடன் மாலை 5 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்வுள்ளது.

    இத்திருக்கோவிலினுள் கொடிமரம் அமைப்பதற்கு அ.தி.மு.க. காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் அளித்த நன்கொடை மூலம் ரூ. 4 லட்சம் மதிப்பில் தேக்கு மரத்தில் அமைக்கப்பட்ட புதிய கொடிமரம் தயார் செய்யப்பட்டது. அந்த கொடி மரம் ஸ்தாபிதம் இன்று காலை நடைபெற்றது. வேதமந்திரங்கள் ஓத சிறப்பு பூஜைநடத்தி இக்கொடி மரத்தின் ஸ்தாபிதம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்தினர், நிர்வாகிகள் அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சி பன்னீர்செல்வம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், ஆர்.டி.சேகர், குண்ணவாக்கம் கிருஷ்ண மூர்த்தி, தென் னேரி வரதராஜீலு, டபிள்யூ.பி.ஜி.சரவணன், விஸ்வநாதன், மாலினி பாலாஜி, ஜெயராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×