என் மலர்
ஆன்மிகம்

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி மகா தீபம் ஏற்றப்பட்டது
திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி மகா தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திண்டிவனம் அருகே திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி தினத்தை யொட்டி மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு காலையில் வக்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம் மற்றும் நவதானிங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் வக்ரகாளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதை தொடர்ந்து கோவில் மேல் பிரகாரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் ஜோதி, ஜோதி, வக்ரகாளி ஜோதி என்ற கோஷங்களுடன் மகாதீபத்தை தரிசனம் செய்து வழிபட்டனர்.

Next Story