என் மலர்
ஆன்மிகம்

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதற்கு உகந்த நேரம் எது?
அட்சய திருதியை தினத்தன்று குறிப்பிட்ட மங்களகரமான நேரத்தில் தங்கம் வாங்கும் பழக்கம் தோன்றியுள்ளது.
அட்சய திருதியை என்றதுமே எல்லோரது மனதிலும் தங்கம் வாங்கும் நாள் என்ற எண்ணம் பதிவாகி விட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் மனதில் இத்தகைய தாக்கம் காணப்படவில்லை.
ஆனால் தற்போது அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்குவது என்பது மோகமாக கூட மாறி விட்டது. பெரும்பாலானவர்கள் அட்சய திருதியை தினத்தன்று நகை வாங்குவதை இறைவழிபாட்டின் ஒரு அங்கமாகவே மாற்றி விட்டனர். இதன் தொடர்ச்சியாக அட்சய திருதியை தினத்தன்று குறிப்பிட்ட மங்களகரமான நேரத்தில் தங்கம் வாங்கும் பழக்கம் தோன்றியுள்ளது. அந்த நேரத்தில் தங்க நகைகள் வாங்குவதற்கு முன்பதிவும் செய்கிறார்கள்.
எனவே அட்சய திருதியை தினத்தன்று நல்ல நேரத்தில் தங்கம் வாங்க வேண்டும் என்ற நினைப்பு மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அந்த நல்ல நேரத்தை அறிவது எப்படி?
உங்களுக்கு உதவும் வகையில் மாலைமலரின் ஆஸ்தான ஜோதிடர் ஆதித்ய குருஜி அட்சய திருதியை நல்ல நேரத்தை கணித்து கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
அட்சயம் என்றால் வளர்தல் என்று பொருளாகும். அதனுடன் திருதியை திதி சேருவது அட்சய திரிதியை நாளாகிறது. அட்சய திருதியை திருநாளில்தான் நமது மூல ஒளிக்கிரகங்களான சூரியனும், சந்திரனும் பூரண பொலிவைப் பெறுகிறார்கள். அதாவது அன்றுதான் சூரியனும், சந்திரனும் ஆண்டுக்கு ஒரு தடவை பெறும் பூரண ஒளியுடனும் வலுவுடனும் இருப்பார்கள்.
எனவே அந்த நாளில் செய்யும் செயல்கள் அனைத்தும் வளரும் என்ற அடிப்படையில் நமது ஞானிகளால் அன்று நல்ல செயல்கள் செய்யப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக அட்சய திருதியை தினத்தன்று ஏழை-எளியவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இன்றைய கலியுகத்தில் வளரும் என்ற விஷயம் தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நகை வாங்கினால் செல்வம் அதிகரிக்கும் என்று யாரோ ஒருவர் சொல்ல அது பரவி சமுதாய பழக்கமாக மாறிப்போய் விட்டது. தங்கம் மற்றும் நகையை இரு கிரகங்களின் அம்சமாக கொள்ளலாம். அதாவது மஞ்சள் நிறமான தங்கம் குரு கிரகத்தை காட்டுகிறது. தங்கத்தில் இருந்து செய்யப்படும் நகைகள் சுக்கிரனை குறிக்கிறது.
எனவே அட்சய திருதியை தினத்தன்று தங்கம் மற்றும் தங்க நகைகள் வாங்க விரும்புபவர்கள் குரு, சுக்கிர ஹோரைகளில் வாங்கலாம். அதுதான் அட்சய திருதியை தினத்துக்கு உரிய நன்மையைத் தரும்.
இந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று குரு ஹோரையானது காலை 8 மணி முதல் 9 மணி வரையும், பிறகு மாலை 3 மணி முதல் 4 மணி வரையும் உள்ளது. அதுபோல் சுக்கிர ஹோரையானது அன்றைய தினம் பகல் 11 மணி முதல் 12 மணி வரை உள்ளது. இந்த ஹோரை நேரங்கள் தங்க நகைகள் வாங்குவதற்கு உகந்த நேரமாகும்.
இவ்வாறு ஜோதிடர் ஆதித்ய குருஜி கூறியுள்ளார்.
- ஆன்மிகம் பற்றிய உங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story