என் மலர்
ஆன்மிகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா 21-ந் தேதி நடக்கிறது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்றாகும்.
இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மற்ற பூஜைகள் நடக்கின்றன.
அன்றைய தினம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் தங்க சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோவில் சேர்கிறார்.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு 20-ந் தேதி, 22-ந் தேதி ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறுகிறது.
இந்த தகவலை கோவில் இணை ஆணையர் தா.வரதராஜன் தெரிவித்துள்ளார்.

Next Story