என் மலர்

  தோஷ பரிகாரங்கள்

  வாஸ்துபடி விளக்கு ஏற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும்...
  X

  வாஸ்துபடி விளக்கு ஏற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும்...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வடக்கு திசை நோக்கி ஏற்றினால் தாமத திருமணம் நீங்கும்.
  • தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்ற கூடாது என்று சொல்லப்படுகிறது.

  * வீடு தூய்மையாக இருந்தால் எல்லா வளங்களும் நாம் அடையாளம். வீட்டை தூய்மையாகவும் நல்ல அதிர்வலைகளோடு இருப்பதற்கு மிக எளிமையான வழி விளக்கு ஏற்றுவது. விளக்கின் ஒளி வீட்டிற்குள் இருக்கும் தீய சக்திகளை அழிக்கும். விளக்கு எந்த எண்ணெயில் ஏற்ற வேண்டும். எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும்; எத்தனை முகம் கொண்ட விளக்கு ஏற்ற வேண்டும்.விளக்கு ஏற்றும் முறை பற்றி பார்ப்போம்.

  * விளக்கேற்றும் நல்லெண்ணையோடு பச்சை கற்பூரத்தை பொடியாக்கி சேர்த்து ஏற்றினால் மிக நல்ல பலன்களை கொடுக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்; மஹாலட்சுமி உங்கள் வீட்டில் தங்குவாள். வீட்டில் நல்ல அதிர்வுகளை உண்டாக்கும்; தீய மனிதர்கள் வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும்; செல்வ வளம் பெருகும். மனதில் அமைதி, மகிழ்ச்சி உண்டாக்கும்; குடும்ப உறவுகள் மேம்படும்.

  * விளக்கு ஏற்ற மிக சிறந்தது நெய், நல்லெண்ணெய், ஐந்து எண்ணய் (நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய்) கூட்டு.

  * கிழக்கு திசை நோக்கி ஏற்றினால் இன்பம் பொங்கும்; குடும்ப உறவுகள் மேம்படும். வடக்கு திசை நோக்கி ஏற்றினால் தாமத திருமணம் நீங்கும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் விரைவாக கடன் அடைபடும். தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்ற கூடாது என்று சொல்லப்படுகிறது.

  * ஐந்து முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் வாழ்க்கைக்கு தேவையான எல்லா வளங்களும் கிடைக்கும். நான்கு முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் செல்வம் பெருகும்; மூன்று முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் குழந்தைகளுக்கு நன்மை உண்டாகும்; இரண்டு முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் குடும்ப உறவுகள் மேம்படும்; ஒரு முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் விரும்பிய காரியம் வெற்றி அடையும்.

  Next Story
  ×