என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பாபாவை நம்பாத பெண்ணின் அகந்தை அகன்றது
    X

    பாபாவை நம்பாத பெண்ணின் அகந்தை அகன்றது

    • அபாசமந்த் என்ற சாயி பக்தருக்கு திருமணம் நடை பெற்று இருநாட்கள்தான் முடிந்திருந்தன.
    • தன்னுடைய புது மனைவிக்கு ஒரு புடவையை வாங்கிக் கொண்டு வந்தார் அபாசமந்த்.

    அபாசமந்த் என்ற சாயி பக்தருக்கு திருமணம் நடை பெற்று இருநாட்கள்தான் முடிந்திருந்தன.

    தன்னுடைய புது மனைவிக்கு ஒரு புடவையை வாங்கிக் கொண்டு வந்தார் அபாசமந்த்.

    ''இந்தப் புடவை உனக்கு கிடைத்தது என்றால் அது சாயிபாபாவின் பெரும்கருணையால்தான்'' என்று கூறினார்.

    அந்தப் பெண்மணிக்கு சாயிபாபாவின் மீது நம்பிக்கை கிடையாது.

    ஆகவே, அவள் ''சாயி பாபாவுக்கும், புடவைக்கும் என்ன உறவு? கடமையை செய்வது நீங்கள். பணம் பெறுவதும் நீங்கள்.

    உங்கள் உழைப்பு பெற்ற ஊதியத்தில் பெற்றது இந்த புடவை, இதில் பாபா ஏன் வந்தார்?'' என்று அகந்தையாக பேசினாள்.

    அபாசமந்த் தன்னுடைய சாயி அனுபவங்களை எடுத்துரைத்தார்.

    தன்னுடைய புருஷனுக்கு பகல் உணவு பரிமாறி விட்டு புடவையைப் பிரித்தாள்.

    வெளியே பார்வைக்கு மட்டும் அழகாகக் காட்சி அளித்த அந்தப் புடவை உள்ளே தீயினால் பொசுங்கிய துண்டுகளாக கிடந்தது.

    திகைத்தாள் அந்தப் பெண்மணி.

    தனது அகந்தைக்காகவும், சாயிபாபாவின் மீது நம்பிக்கை இன்மையக்காகவும் உள்ளம் வேதனை அடைந்தாள்.

    ''நாளை இந்த நேரத்திற்குள் இதே போன்ற புடவை கிடைத்தால் எனது தவற்றை உணர்ந்து கொள்கிறேன், என்னை மன்னித்து விடுங்கள்'' என்றாள்.

    மறுநாள் காலை சமந்த்திற்கு பணம் தர வேண்டிய நண்பர் ஒருவர் பணத்திற்குப் பதிலாக ஒரு புடவையுடன் வந்தார்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு பாக்கிக்குப் பதிலாகப் புடவையைக் கொடுத்தமைக்கு மன்னிப்பு கேட்டார்.

    அபாசமந்த் மனைவி வியந்து போனாள்.

    முதல் புடவையைப் போலவே இருந்தது, இந்தப் புடவை.

    புடவையின் மூலம் எப்படியோ சாயிபாபாவுக்கு ஒரு புதிய பக்தை கிடைத்துவிட்டாள்.

    ஒவ்வொரு அசைவும் அவருடைய கருணையால்தான் என்பதை உணர்ந்தால் போதும். அவருடைய கருணை நிச்சயம் நமக்கு கிடைத்துவிடும்.

    Next Story
    ×