என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

ஆரத்தியும் வழிப்பாட்டு முறையும்
- இந்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்த ஆரத்திகள் முறையாக நடைபெற்று வருகின்றன.
- ஆரத்தியை தினம் தினம் இப்படி பழக்கப்படுத்திக் கொண்டால் மந்த புத்தி மாறி சுறு சுறுப்படையலாம்.
சாய் மார்க்கத்தில் செல்வதற்கு மூன்று சிறந்த வழிகள் உண்டு. அதில் முதலாவது,
1. சீரடிக்கு செல்வது
2. சாயி சத்சரித்திரம் பாராயணம் செய்வது.
3. நான்கு வேளைகளும் ஆரத்தி பாடுவது.
இதில் மூன்றாவது வேலையை முதலில் செய்து விட்டால் முதல் இரண்டு வேலைகளும், எந்த தடையுமின்றி நடக்கும். ஆகையால் ஆரத்தி செய்வதால் நல்ல பலன்களே கிடைக்கும்.
குடும்பத்தினர், பந்துக்கள் ஓர் இடத்தில் சேர்ந்து ஒழுங்கு தவறாமல் சாய் ஆரத்திகளை பாடுவதினால் மனம் நிம்மதியடைந்து நல்ல சூழ்நிலை குடும்பத்தில் உண்டாகும்.
ஆரத்தி நடக்கும் இடம் புனிதமடைந்து சாந்தி நிலையமாக மாறும்.
சீரடி சாய் மந்திரில் தினமும் நான்கு வேளை ஆரத்தி நடைபெறுகிறது.
காலை 4.30 காகட ஆரத்தி
மதிய வேளையில் 12 மணிக்கு மதிய ஆரத்தி நடக்கும்.
மாலையில் சூரியன் மறையும் கோதூளி வேளையில் தூப ஆரத்தியும், இரவு 10.30 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடைபெறுகின்றன.
சமாதி மந்திரியில் ஆரத்தி நடை பெற்றுக் கொண்டிருந்தாலும், துவாரக மயீ, சாவடி, குருஸ்தான், க்யூ காம்ப்ளக்சில் டி.வி.யில் பார்த்துக் கொண்டு நாம் ஆரத்தி நடத்திக் கொள்ளலாம்.
இந்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்த ஆரத்திகள் முறையாக நடைபெற்று வருகின்றன.
ஆரத்தியை தினம் தினம் இப்படி பழக்கப்படுத்திக் கொண்டால் மந்த புத்தி மாறி சுறு சுறுப்படையலாம்.






