search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்: லீசெஸ்டயர் அணிக்காக களமிறங்கும் பும்ரா உள்பட 4 இந்திய வீரர்கள்
    X

    பும்ரா - ரிஷப் பண்ட்

    பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்: லீசெஸ்டயர் அணிக்காக களமிறங்கும் பும்ரா உள்பட 4 இந்திய வீரர்கள்

    • ரிஷப்பண்ட், பும்ரா உள்பட 4 இந்திய வீரர்கள் லீசெஸ்டயர் அணிக்காக ஆடுகிறார்கள்.
    • டெஸ்ட் போட்டிக்கு முன்பு நடைபெறும் இந்த பயிற்சி ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும்.

    லீசெஸ்டர்:

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

    5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி டிரா ஆனது. 2-வது மற்றும் 4-வது டெஸ்டில் இந்தியா வெற்றி ( 151 ரன், 157 ரன்) பெற்றது. 3-வது போட்டியில் இங்கி லாந்து வெற்றியை (இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்) பெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது.

    ஒத்திவைக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பு ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி லீசெஸ்டயர் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்து இருந்தது. அதன்படி பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது.

    டெஸ்ட் போட்டிக்கு முன்பு நடைபெறும் இந்த பயிற்சி ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க 11 பேர் கொண்ட அணியில் இடம்பெற போராடுகிறார்.

    ரிஷப்பண்ட், புஜாரா, பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 இந்திய வீரர்கள் லீசெஸ்டயர் அணிக்காக ஆடுகிறார்கள். அதாவது அவர்கள் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவார்கள்.

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், விகாரி, கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா,ஷர்துல் தாகூர், முகது ஷமி, முகது சிராஜ், உமேஷ் யாதவ்.

    லீசெஸ்டயர்: சாம் இவான்ஸ் (கேப்டன்), ரேகான் அகமது, சாம் பேட்ஸ் (விக்கெட் கீப்பர்), பவ்லே, விலடேவாஸ், வெசன் கிம்பர், அபி ஷகாண்டே, ரோமன் வால்கர், புஜாரா, ரிஷப்பண்ட், பும்ரா, பிரசித் கிருஷ்ணா

    Next Story
    ×