search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அவங்களுக்கு பாஸ்பால்: எங்களுக்கு பாக்பால்- பாகிஸ்தானின் புதிய ஸ்டைலை அறிமுகம் செய்த அக்தர்
    X

    அவங்களுக்கு பாஸ்பால்: எங்களுக்கு பாக்பால்- பாகிஸ்தானின் புதிய ஸ்டைலை அறிமுகம் செய்த அக்தர்

    • இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது.
    • இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 166 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் "பாஸ்பால்" என்ற வார்த்தை சமீப காலங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இது டெஸ்ட்டில் அதிரடியான பேட்டிங்கின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கண்டறிந்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் மூலம் இது பிராண்ட் ஆனது. நடந்து வரும் ஆஷஸ் தொடரின் காரணமாக தலைப்புச் செய்திகளில் இந்த வார்த்தை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இதேபோல மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தியாவின் ஆக்ரோஷமான ஆட்டத்தை தொடர்ந்து ராகுல் டிராவிட் அணியைக் குறிக்கும் வகையில் 'டிராவ்பால்' என்ற பிராண்ட் உருவானது.

    இந்த வரிசையில் பாக்பால் என்ற பிராண்ட் உருவாகி இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் அறிவித்துள்ளார்.

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. இதனை குறிக்கும் வகையிலும் பாஸ்பால் மற்றும் டிராவ்பால் வரிசையில் "பாக்பால்" என்ற பிராண்ட் பாகிஸ்தான் கிரிக்கெட்டை குறிக்கும் என்று அக்தர் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

    இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் 28.3 ஓவர்களில் 145 ரன்களை எடுத்தது. ரன் விகிதம் ஓவருக்கு 5-க்கு மேல் உயர்ந்தது. இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 166 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் செய்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×