என் மலர்
OTT

காந்தாரா முதல் லோகா வரை... இந்த வார OTT அப்டேட்
- தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
- 2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான காந்தாரா படம் ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
இட்லி கடை:
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியது. இது தனுஷ் நடித்த 52-வது திரைப்படமாகும். இந்த படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் இப்படம் நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் நாளை வெளியாகிறது
பிளாக்மெயில்:
ஸ்ரீகாந்த், ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான ப்ளாக்மெயில் திரைப்படம் நாளை மறுநாள் (அக்டோபர் 30) முதல் சன் நெக்ஸ்ட் மற்றும் சிம்ப்ளி சவுத் ஆகிய OTT தளத்தில் வெளியாகிறது
காந்தாரா சாப்டர் 1:
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான காந்தாரா படம் ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' அக்டோபர் 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் வெளியான 20 நாட்களில் உலக அளவில் ரூ.803 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில், 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் அக்.31ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
லோகா சாப்டர் 1:
இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமான லோகா சாப்டர் 1 படம் உலகலவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிக வசூல் படமாக மாறியது. இந்நிலையில், லோகா திரைப்படம் வரும் 31ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகிறது
இதனிடையே 10-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் இந்த வாரம் வெளியாக உள்ளது.






