அடுத்த படம் இயக்குவது எப்போது?- பிரதீப் ரங்கநாதன் பதில்

'டிராகன்', 'டியூட்' என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அடுத்து 'எல்.ஐ.கே.' படம் வெளியாக இருக்கிறது. புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அடுத்த படம் இயக்குவது எப்போது?- பிரதீப் ரங்கநாதன் பதில்
Published on

'கோமாளி' படத்தின் மூலமாக இயக்குனராக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' என்ற படத்தை இயக்கி, நடித்தார்.

அதன்பிறகு 'டிராகன்', 'டியூட்' என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அடுத்து 'எல்.ஐ.கே.' படம் வெளியாக இருக்கிறது. புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதனிடம், 'இயக்குனர், நடிகர். எது பிடித்திருக்கிறது? எதில் உங்கள் கவனம் இருக்கிறது?' என்று கேட்கப்பட்டது. அதற்கு, ''இப்போதைக்கு நடிப்பதில் மட்டுமே என் கவனம் இருக்கிறது'', என்றார்.

மேலும் அவர் கூறும்போது, ''இயக்குனர் ஆகமாட்டேன் என்று சொல்லமுடியாது. நல்ல கதை ரெடியாகி விட்டது என்றால் இயக்குனராக என்னை எதிர்பார்க்கலாம். எல்லாவற்றையுமே சூழ்நிலை தான் உருவாக்கும். ஒரு கதை என் மனதில் இருக்கிறது. அதில் பாதி எழுதி முடித்திருக்கிறேன். அது முடிந்ததும் முடிவை சொல்கிறேன்'', என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com