என் மலர்
சினிமா செய்திகள்

வங்காள விரிகுடா விமர்சனம்
கதைக்களம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அண்ணாச்சி என மக்களால் அழைக்கப்படும் பெரிய செல்வந்தராக குகன் சக்கவர்த்தி வாழ்ந்து வருகிறார். திருமணமான முதல் இரவே அவருக்கு இல்லறத்தில் சோதனை வருகிறது. இதனால் மனம் உடைந்து கடற்கரையில் தனிமையில் இருக்கும் நேரத்தில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அவரை காப்பாற்றிய குகனுக்கு தற்கொலைக்கு முயன்ற பெண் தனது முன்னாள் காதலி என தெரிய வருகிறது.
அவரது நிலையை அறிந்த குகன் சக்கரவர்த்தி அந்த பெண்ணுடன் வாழ்வது மட்டுமின்றி அவருக்காக ஒரு கொலை செய்கிறார். இந்நிலையில் குகன் சக்கரவர்த்தியால் கொலை செய்யப்பட்டவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குகனையும், காதலியையும் மிரட்டுகிறார். இதனால் குகன் அதிர்ச்சி அடைகிறார்.
இறுதியில் கொலை செய்யப்பட்டவர் எப்படி மிரட்டுகிறார்? குகன் சக்கரவர்த்தி என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தை இயக்கியது மட்டுமின்றி படத்தில் உள்ள 21 கிராப்ட்களையும் தனி ஆளாக கையாண்டு கின்னஸ் சாதனைக்கு முயற்சித்துள்ளார் இயக்குநர் குகன் சக்கரவர்த்தி. மனைவியிடம் அன்பு முன்னாள் காதலியிடம் அர்ப்பணிப்பு மற்றும் ஊர் செல்வந்தராக நடித்துள்ள குகன் கேரக்டர் பொருத்தமாக அமைந்துள்ளது.
படத்தில் 2 கதாநாயகிகளின் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. பொன்னம்பலம், வையாபுரி, வாசுவிக்ரம் ஆகியோர் நடிப்பு கூடுதல் பலம்.
காட்சிகளில் பல இடங்களில் செயற்கை தனமான நடிப்பு, திரைக்கதையில் சுவாரசியம் குறைவு. ஆகியவற்றை சரி செய்து இருக்கலாம். இறுதிக்காட்சியில் மெரினா கடலுக்கு திராவிட கடல் என பெயர் மாற்ற கோரிக்கை சிறப்பு.






