என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    3 நாட்களில் ₹183 கோடி வசூலை வாரிச்சுருட்டிய தி ராஜா சாப்
    X

    3 நாட்களில் ₹183 கோடி வசூலை வாரிச்சுருட்டிய 'தி ராஜா சாப்'

    பிரபாஸ் மிகவும் ஜாலியாக நகைச்சுவைத்தனத்துடன் நடித்துள்ளார்.

    மாருதி இயக்கத்தில் பிரபாஸ் 'ராஜாசாப்' திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

    மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் பிரபாஸ் மிகவும் ஜாலியாக நகைச்சுவைத்தனத்துடன் நடித்துள்ளார்.

    இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் ஜனவரி 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், ராஜா சாப் படம் வெளியாகி இன்றுடன் மூன்று நாட்கள் ஆன நிலையில், படத்தின் வசூல் நிலவரம் குறித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    அதன்படி, ராஜா சாப் படம் உலகளவில் ரூ.183 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

    Next Story
    ×