என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரியோ நடித்த `ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியீடு
    X

    ரியோ நடித்த `ஆண் பாவம் பொல்லாதது' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியீடு

    • ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்து வெளியானது ஜோ திரைப்படம்
    • ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் ஆண் பாவம் பொல்லாதது.

    2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் ஆண் பாவம் பொல்லாதது. இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.

    இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

    இந்நிலையில், ஆண் பாவம் படத்தின் முதல் சிங்கிளான "ஜோடி பொருத்தம்" பாடல் இன்று மாலை 6.05 மணி வெளியாக இருக்கிறது.இப்பாடலை சித்து குமார் இசையில் விக்னேஷ் ராமகிருஷ்ணா வரிகளில் லக்ஷ்மிகாந்த் பாடியுள்ளார்.

    ரியோ கடைசியாக நடித்த ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் வெற்றிப்பெற்ற நிலையில். இப்படமும் ஹிட்டாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

    Next Story
    ×