என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜென்டில்வுமன் படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியது தணிக்கை குழு
    X

    ஜென்டில்வுமன் படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியது தணிக்கை குழு

    • லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ஜென்டில்வுமன்.
    • இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது.

    கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசியன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில்,லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ஜென்டில்வுமன்.

    இந்த திரைப்படம் சமூகத்தில் குடும்ப அமைப்பில் பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ளது.

    இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    திருமணம் ஆன ஹரி கிருஷ்ணன் லாஸ்லியாவுடன் தொடர்பு வைத்துள்ளார். லிஜோமோல் , லாஸ்லியா மற்றும் ஹரி கிருஷ்ணன் இந்த மூவருக்கும் இடையே உள்ள தொடர்பை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்நிலையில் திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×