search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நான் எந்த இசையமைப்பாளருடன் இணைய வேண்டும்? ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய யுவன்
    X

    நான் எந்த இசையமைப்பாளருடன் இணைய வேண்டும்? ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய யுவன்

    • யுவன் சங்கர் ராஜா தற்போது தளபதி 69 படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
    • இவரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    பூவெல்லாம் கேட்டுப்பார், தீனா, நந்தா, 7 ஜி ரெயின்போ காலனி, மன்மதன், ராம், சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசையில் சமீபத்தில் வெளியான கஸ்டடி மற்றும் பொம்மை படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தளபதி 69 படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.




    இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. அதில், எனது அடுத்த பெரிய பாடலுக்கு நான் எந்த இசை அமைப்பாளருடன் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? பெயரை கீழே பதிவிடுங்கள், அதைச் செய்வோம்! என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பல இசையமைப்பாளரின் பெயர்களை பதிவிட்டு வருகின்றனர்.



    Next Story
    ×