search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வளைத்தளத்தில் பரவிய ஆபாச வீடியோ.. அதிர்ச்சியில் பிரபல நடிகை
    X

    அஞ்சலி அரோரா

    வளைத்தளத்தில் பரவிய ஆபாச வீடியோ.. அதிர்ச்சியில் பிரபல நடிகை

    • இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி அரோரா.
    • இவர் இடம்பெற்றிருப்பது போன்ற ஆபாச வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது.

    இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி அரோரா. சமீபத்தில் இவர் ஆபாசமாக போஸ் கொடுத்து இருப்பது போன்ற வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆபாச வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினார்கள். ஆபாச வீடியோவில் இருப்பது அஞ்சலி அரோராதானா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

    அஞ்சலி அரோரா

    இந்நிலையில் கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அஞ்சலி அரோராவிடம் ஆபாச வீடியோ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறும்போது, "உண்மையில், என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆபாச வீடியோவில் எனது பெயரையும் புகைப்படத்தையும் வைத்து மக்களை நம்ப செய்துள்ளனர்.

    அஞ்சலி அரோரா

    இப்படி ஏன் செய்கிறார்கள் என்று புரியவில்லை. அந்த வீடியோவை வெளியிட்டவர்களுக்கு குழந்தை, குடும்பம் இருக்கும். வீடியோவை எனது குடும்பத்தினரும் பார்க்கிறார்கள், அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இது போன்ற போலியான வீடியோக்களை பதிவிட்டு எனது பெயரை கெடுக்காதீர்கள்" என்றார்.

    Next Story
    ×