search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெங்கட் பிரபு வெளியிட்ட சுனைனா பட போஸ்டர்
    X

    வெங்கட் பிரபு

    வெங்கட் பிரபு வெளியிட்ட சுனைனா பட போஸ்டர்

    சென்னை-28, மாநாடு போன்ற படங்களை இயக்கியவர் வெங்கட் பிரபு. சுனைனா பட போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு இன்று வெளியிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சுனைனா. இவர் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன், நீர்ப்பறவை, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். தற்போது பன்மொழிகளில் உருவாகும் ரெஜினா என்ற புதிய திரைப்படத்தில் முதன்மை நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை எல்லோ பியர் புரொடக்‌ஷன் சதீஷ் நாயர் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார், மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா. இவர் மலையாளத்தில் இயக்கிய "பைப்பின் சுவத்திலே பிராணயம்" மற்றும் "ஸ்டார்" படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ரெஜினா படத்தின் பாடல்களை இசையமைத்து படத்தை தயாரிக்கிறார் சதிஷ் நாயர். இப்படத்தின் பாடல் வரிகளை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.ஆர் எழுதியுள்ளனர்.

    ரெஜினா

    இந்நிலையில் "ரெஜினா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இதன் மலையாள போஸ்டரை பிரபல மலையாள இயக்குனர் ஆஷிக் அபு வெளியிட்டுள்ளார். "ரெஜினா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×