என் மலர்

  சினிமா செய்திகள்

  இதை யாரும் நம்ப வேண்டாம் - வாரிசு தயாரிப்பாளர் விளக்கம்
  X

  இதை யாரும் நம்ப வேண்டாம் - 'வாரிசு' தயாரிப்பாளர் விளக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு.
  • இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.

  வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.


  இந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது 'ஆர்சி 15' மற்றும் 'எஸ்.வி.சி 50' படங்களையும் தயாரிக்கிறது. இந்நிலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு அறிமுக நடிகர், நடிகைகள், தேவை படுவதாகவும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வைரலாக பரவியது. இந்த அறிவிப்பால் பலரும் இதற்கு விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது.


  இந்த தகவலை கண்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம். தங்கள் தரப்பிலிருந்து இதுபோன்ற எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் இந்த தகவல் முற்றிலும் பொய் என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.


  Next Story
  ×