என் மலர்

  சினிமா செய்திகள்

  தனுஷுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நடிகை
  X

  பிரியங்கா அருள் மோகன்

  தனுஷுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நடிகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் கேப்டன் மில்லர்.
  • இப்படத்தின் கதாநாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இதில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  கேப்டன் மில்லர்

  இதைத் தொடர்ந்து, ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். கேப்டன் மில்லர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். வரலாற்று பாணியில் உருவாகவுள்ள இப்படத்தின் வீடியோ அண்மையில் வெளியானது.

  பிரியங்கா அருள் மோகன்

  இந்நிலையில், இப்படத்தில் நடிக்கவுள்ள கதாநாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் படங்களில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை படக்குழு அதிகப்படுத்தியுள்ளது.

  Next Story
  ×