என் மலர்

  சினிமா செய்திகள்

  இறுதியாக சீதா உங்களை மயக்க வந்துள்ளார்.. வெளியானது சீதா ராமம் லிரிக்கல் வீடியோ..
  X

  சீதா ராமம்

  இறுதியாக சீதா உங்களை மயக்க வந்துள்ளார்.. வெளியானது சீதா ராமம் லிரிக்கல் வீடியோ..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் சீதா ராமம்.
  • துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார்.

  மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் துல்கர் சல்மான். இவர் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

  ஸ்வப்னா சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிடுகிறது. விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் உருவாகிவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'சீதா ராமம்' ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


  சீதா ராமம்

  இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி வரிகளில் சீதாவை வர்ணித்து ராம் பாடும் இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள துல்கர் சல்மான் "இறுதியாக எங்கள் சீதா உங்களை மயக்க வந்துள்ளார்" என குறிப்பிட்டுள்ளார்.


  Next Story
  ×