search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அனிமல் திரில்லராக தயாராகியுள்ள கெஸ்ட் : சாப்டர்-2
    X

    சாக்‌ஷி அகர்வால்

    அனிமல் திரில்லராக தயாராகியுள்ள கெஸ்ட் : சாப்டர்-2

    • ஆறாவது வனம் படத்தை இயக்கிய இயக்குனர் ரங்கா புவனேஷ்வர் இயக்கி உள்ள படம் ‘கெஸ்ட் : சாப்டர்-2’.
    • இந்த படத்தில் சாக்‌ஷி அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    "ஆறாவது வனம்" என்கிற படத்தை இயக்கியவர் இயக்குனர் ரங்கா புவனேஷ்வர். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகவுள்ள படம் 'கெஸ்ட் : சாப்டர்-2'. சாக்‌ஷி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார், விது பாலாஜி, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    அனிமல் திரில்லர் என்கிற ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். அன்வர் கான் தாரிக் இசையமைக்கிறார். படத்தொகுப்பை சியான் கவனிக்கிறார். இந்த படத்தை குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் டி.கோகுலகிருஷ்ணன் தயாரிக்கவுள்ளார்.

    சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகை சினேகா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இணைந்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


    சாக்‌ஷி அகர்வால்

    இந்த படம் குறித்து இயக்குனர் ரங்கா புவனேஷ்வர் கூறும்போது, "இன்றைக்கு இதுபோன்ற வித்தியாசமான திரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த ஓநாய் மனிதன் என்கிற கதைக்களம் இந்திய சினிமாவிலேயே முதல்முறையாக இப்போதுதான் முழுமையாகக் கையாளப்படுகிறது.

    இதற்கு முன்னதாக இந்தியில் எழுபதுகளின் காலகட்டத்தில் ஒன்றிரண்டு படங்கள் வந்திருந்தாலும் அவற்றில் ஓநாய் மனிதன் என்கிற உருவத்தை அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சாதாரணமாகவே கையாண்டு இருந்தார்கள். ஆனால் இந்த படத்தில் ஓநாய் மனிதன் உருவாக்கத்தில் விஎஃப்எஸ் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. மேலும் ஹாங்காங்கில் வைத்து இந்த படத்தின் விஃஎப்எக்ஸ் காட்சிகளை வடிவமைத்துள்ளோம்." என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×