என் மலர்

  சினிமா செய்திகள்

  கொட்டுனா தான் தெரியும் விஷம் என்னன்னு? வைரலாகும் அரவிந்த் சாமி பட டிரைலர்..
  X

  அரவிந்த் சாமி

  கொட்டுனா தான் தெரியும் விஷம் என்னன்னு? வைரலாகும் அரவிந்த் சாமி பட டிரைலர்..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள படம் 'ரெண்டகம்'.
  • இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

  தமிழில் ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான இவர், சில வருடங்களாக நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார்.


  ரெண்டகம்

  இதையடுத்து அரவிந்த் சாமி, குஞ்சாக்கோ போபன் இணைந்து நடித்துள்ள படம் 'ரெண்டகம்'. மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் 'ரெண்டகம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிப்படமாக வெளியாக உள்ளது.

  மலையாளத்தில் 'ஒட்டு' என்ற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தில் அரவிந்த் சாமி, ஈஷா ரெப்பா, ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பெலினி டிபி இயக்கியுள்ள இந்த படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 'தி ஷோ பீப்பிள்' நிறுவனம் தயாரித்துள்ளது.


  ரெண்டகம்

  இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகர் அரவிந்த் சாமியின் வித்தியாசமான கெட்டப்பில் ஆக்‌ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  Next Story
  ×