என் மலர்

  சினிமா செய்திகள்

  28 வயது காதலனை மணந்த பாப் பாடகி.. தடுக்க முயன்ற 2-வது கணவர் கைது..
  X

  28 வயது காதலனை மணந்த பாப் பாடகி.. தடுக்க முயன்ற 2-வது கணவர் கைது..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் 28 வயதான காதலர் அஸ்காரியை திருமணம் செய்து கொண்டார்.
  • திருமண நிகழ்ச்சியில் முன்னாள் கணவர் ஜேசன் அத்துமீறி நுழைந்துள்ளார்

  பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது முதல் திருமணம் விவாகரத்து ஆனதை அடுத்து தனது நண்பர் ஜேசனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவா்கள் 55 மணி நேரம் மட்டுமே சோ்ந்து வாழ்ந்தனா். ஜேசன் தன்னை புாிந்து கொள்ளவில்லை என கூறி பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜேசனை விவாகரத்து செய்தார்.

  இதையடுத்து 40 வயதான பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் சாம் அஸ்காாி என்ற வாலிபரை (28 வயது) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.


  இவர்களது காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. ஆனால் இவர்களின் திருமண நிகழ்ச்சியில் முன்னாள் கணவர் ஜேசன் அத்துமீறி நுழைந்துள்ளார். இந்த திருமணத்திற்கு அவர் அழைக்கப்படாததால் பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னை அழைத்ததாக அவா் வாக்குவாதம் செய்தாா். இதையடுத்து ஜேசனை போலீசாா் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

  Next Story
  ×