search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஏ சான்றிதழ் பெற்ற பா. இரஞ்சித் திரைப்படம்
    X

    பா. ரஞ்சித்

    'ஏ' சான்றிதழ் பெற்ற பா. இரஞ்சித் திரைப்படம்

    • முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது.
    • இப்படம் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இப்படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மேலும் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார்.


    நட்சத்திரம் நகர்கிறது

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, "நட்சத்திரம் நகர்கிறது" திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×