என் மலர்

  சினிமா செய்திகள்

  கோவில் பிரசாதத்தை கொண்டு சென்று எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி அம்மாவுக்கு கொடுப்பேன்.. இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்
  X

  சங்கர் கணேஷ்

  கோவில் பிரசாதத்தை கொண்டு சென்று எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி அம்மாவுக்கு கொடுப்பேன்.. இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிம்பொனி மியூசிக்கில் வெளியானது ஆடி மாதத்திற்கான ஸ்பெஷல் ஆன்மீக பாடல் ’படவேட்டம்மன்’.
  • இதன் வெளியீட்டு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அம்மன் குறித்து பேசியுள்ளார்.

  ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அம்மன் கோவில்களில் திருவிழா, சிறப்பு வழிபாடுகள், கூழ் வார்த்தல் என களைகட்டும். தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்சமாக அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

  அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மன் பக்தர்களை பரவசப்படுத்தும் விதமாக உருவாகியிருக்கிறது 'படவேட்டம்மன்' என்ற தனியிசை வீடியோ இசை பாடல். எஸ் மியூசிக் நிறுவனம் சார்பில் நடிகர் சுனில்.ஜி இந்த வீடியோ இசை பாடலை தயாரித்து நடித்துள்ளார். இப்பாடலுக்கு திரைப்பட நடிகை ஹரினி நடனம் ஆடியுள்ளார். சரவணன் இசையமைத்துள்ள இந்த பாடல் வரிகளை முத்துக்குமார் எழுத, அனு ஆனந்த் பாடியுள்ளார். நடன இயக்குனர் விஜயலட்சுமி இப்பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார். கல்யாண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்பாடலை குணசேகரன் இயக்கியுள்ளார்.


  பிரபல இசை நிறுவனமான சிம்பொனி மியூசிக் வெளியிடும் 'படவேட்டம்மன்' வீடியோ பாடல் திரையிடல் மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் ஏ.ஆர். ரமேஷ், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், சிம்பொனி மியூக் நிறுவனத்தின் சிஈஓ ஸ்ரீ ஹரி - விகேஷ் மற்றும் இசை ஆல்பத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் கலந்துக்கொண்டார்னர்.

  அந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பேசியதாவது, "நான் அம்மனின் தீவிர பக்தன். மாதம் மாதம் திருவேற்காடு கோவிலுக்கு சென்று வருவேன். அந்த பிரசாதத்தை எடுத்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்துக்கு சென்று எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி அம்மாவுக்கு கொடுப்பேன். எம்.ஜி.ஆர் இருந்தவரை இது தொடர்ந்தது. நான் அம்மனின் செல்ல பிள்ளை. இந்த படவேட்டம்மன் பாடல் மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக பாடலில் நடனம் ஆடிய ஹரினியும், அம்மனும் ஒன்றாக இருந்தார்கள். நான் இருவர் முகத்தையும் பார்த்துக்கொண்டிருந்தேன். பாடல் வரிகளும், இசையும், பாடிய விதமும் சிறப்பு என்றார்.

  Next Story
  ×