என் மலர்

  சினிமா செய்திகள்

  உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் இணைந்த லெஜண்ட் சரவணன்
  X
  லெஜண்ட் சரவணன்

  உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் இணைந்த லெஜண்ட் சரவணன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • லெஜண்ட் சரவணன் முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ள படம் 'தி லெஜண்ட்'.
  • இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் பெற்றுள்ளது.

  லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. அண்மையில் வெளியாகிய இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது.


  தி லெஜண்ட்

  ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி 'ஒரு லெஜண்டாக' எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் ஜி என் அன்புச்செழியன் பெற்றிருக்கிறார்.


  தி லெஜண்ட்

  மேலும், இப்படம் குறித்து கோபுரம் சினிமாஸ் ஜி என் அன்புச்செழியன் கூறுகையில், "என் கணிப்பின் படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார் என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும்" எனக் கூறியுள்ளார்.

  Next Story
  ×