search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கருணாநிதி தன் எழுத்தின் மூலம் தலைவர்களை உருவாக்கியவர் - ஜெயம் ரவி நெகிழ்ச்சி
    X

    கருணாநிதி தன் எழுத்தின் மூலம் தலைவர்களை உருவாக்கியவர் - ஜெயம் ரவி நெகிழ்ச்சி

    • நடிகர் ஜெயம் ரவி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் நடிக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி, அகிலன், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து இறைவன், ஜெஆர்30 , ஜெ.ஆர்.31 மற்றும் சைரன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    இதையடுத்து ஜெயம் ரவி கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது, கலைஞர் நம்மோடு இல்லை என்றாலும் அவரது கருத்துகள் நம்முடன் இருக்கிறது என்பதுதான் மிகவும் சந்தோஷமான விஷயம். என்னை அனைவரும் கேட்டார்கள் கட்சி சார்பாக வந்திருக்கிறீர்களா? என்று ஆனால் நான் கலை சார்பாக வந்திருக்கிறேன். ஆனால், கட்சி சார்பாகவும் வந்திருக்கிறேன் சினிமா என்ற கட்சி சார்பாக. ஏனென்றால் கருணாநிதியும் முதல் கட்சி சினிமா கட்சிதான் நம் கட்சியும் அந்த கட்சிதான்.

    கருணாநிதியை நான் நேரில் பார்த்திருக்கிறேன் என்பதே எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். அதுமட்டுமல்லாமல், கருணாநிதியின் கையால் கலைமாமணி விருது வாங்கியது என்னால் மறக்க முடியாது. அதைவிட ஒரு பெரிய வாழ்த்து எந்த கலைஞனுக்கும் கிடைக்காது. கலைஞரின் 100 ஆண்டு என்பது அடுத்த 100-வது ஆண்டுக்கு முதல் படி.


    தன் எழுத்தில் தலைவர்களை உருவாக்குவது கருணாநிதி மட்டும்தான். அந்த உயிரோட்டம் எந்த எழுத்தாளரிடமும் நாம் பார்க்க முடியாது. கலைஞரின் வசனங்கள் பேசி பலர் வாய்ப்பு தேடி அலைகிறார்கள். என்னால் நடிக்க முடியும் என்பதற்கு அளவு அவரின் வசனம் தான். 'பராசக்தி' திரைப்படத்தின் வசனத்தை பேசி நடிக்க வேண்டும் என்பது தான் எல்லாருடைய ஆசையும், அதை பேசி நடித்துவிட்டால், அதில் குறைந்தபட்ச அளவு வந்துவிட்டால் அவர் பெரிய நடிகர்.

    'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் பழைமையான தமிழ் பேசி நடிக்க வேண்டியது இருந்தது. அப்போது கலைஞரின் வசனங்களை படித்து அந்த உச்சரிப்பை கற்றுக் கொண்டு தான் பேசினேன். கருணாநிதியின் சினிமா வழிக்காட்டுதலில் நாங்கள் பல பேர் வந்துவிட்டோம். கருணாநிதியால் மிகச்சிறந்த நடிகர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது என்று பேசினார்.

    Next Story
    ×