என் மலர்
சினிமா செய்திகள்

ஜான்வி கபூர்
திருப்பதியில் இந்தி நடிகை ஜான்வி கபூர்
- தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஜான்வி கபூர்.
- இந்த படத்தின் மூலம் அறிமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார்.
பிரபல தயாரிப்பாளரான போனிகபூரின் மகள் ஜான்வி கபூர் 'தடக்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். இவர் தனது நடிப்பால் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் சிறந்த அறிமுக கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார்.
ஜான்வி கபூர்
இவர் நடித்துள்ள குட்லக் ஜெரி திரைப்படம் ஜுலை 29-ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அவர் பாரம்பரிய உடையான பாவாடை தாவணி அணிந்து வந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story






