என் மலர்

  சினிமா செய்திகள்

  பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷின் தாயார் காலமானார்
  X

  ஐசரி கே. கணேஷ்

  பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷின் தாயார் காலமானார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐசரி கே. கணேஷ் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • இவர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தராவார்.

  திரைப்பட நடிகர், சட்டமன்ற உறுப்பினர் என பன்முகங்களை கொண்டவர் ஐசரி வேலன். இவர் 1970-ஆம் ஆண்டு வெளியான 'எங்க மாமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும், இவர் எம்.ஜி.ஆர். உடன் அதிக படங்களில் நடித்துள்ளார்.

  இவரது மகனும் வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான ஐசரி கே. கணேஷ் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடைசியாக ஷங்கரின் 2.0 படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் மூக்குத்தி அம்மன், குட்டி ஸ்டோரி, வெந்து தணிந்தது காடு போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.


  புஷ்பா ஐசரி வேலன்

  தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் ஐசரி வேலனின் துணைவியாரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கே. கணேஷின் தாயாருமான திருமதி. புஷ்பா ஐசரி வேலன் (வயது 75) இன்று (14/07/2022) காலை 9:30 மணிக்கு வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார்.

  இவரது இறுதி சடங்கு நாளை காலை 9 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு தாழம்பூர் வேல்ஸ் வளாகத்தில் நடைபெறும். இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  Next Story
  ×