search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல நடிகை தூக்கு போட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
    X

    ஆகான்க்சா துபே

    பிரபல நடிகை தூக்கு போட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

    • பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே வாரணாசியில் உள்ள ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்த கொண்டுள்ளார்.
    • இவர் 17 வயதில் மேரி ஜங் மேரா பைஸ்லா என்ற படத்தில் அறிமுகமானார்.

    உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே (வயது 25) என்பவர் தூக்கு போட்ட நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆகான்க்சா துபே


    ஆகான்க்சா, முதன்முறையாக மேரி ஜங் மேரா பைஸ்லா என்ற படத்தில் தனது 17 வயதில் நடித்து அறிமுகமானார். அதன்பின், போஜ்புரியில் வெளியான முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்திலும், வீரோன் கே வீர், பைட்டர் கிங், கசம் பைதா கர்ணே கி 2 மற்றும் பிற படங்களிலும் அவர் நடித்து உள்ளார். போஜ்புரியில் பிரபல நடிகர்களான கேசரி லால் யாதவ், பவன் சிங் மற்றும் பிரதீப் பாண்டே ஆகியோருடனும் ஒன்றாக நடித்து உள்ளார். நேற்றிரவு பாடல் ஒன்றுக்கு செல்பி வடிவிலான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.


    ஆகான்க்சா துபே


    இந்நிலையில், தூக்கு போட்ட நிலையில் அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து உள்ளது. நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங் என்பவருடன் காதலில் இருந்த ஆகான்க்சா, அதுபற்றி சமீபத்தில், காதலர் தினத்தில் சமூக வலைத்தளத்தின் வாயிலாக காதலை அவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர்.

    Next Story
    ×