என் மலர்

  சினிமா செய்திகள்

  சீதா நீ யாரு? வெளியானது துல்கர் சல்மான் பட டீசர்..
  X

  மிருணாள் தாக்கூர் - துல்கர் சல்மான்

  சீதா நீ யாரு? வெளியானது துல்கர் சல்மான் பட டீசர்..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் 'சீதா ராமம்’.
  • துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார்.

  மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் துல்கர் சல்மான். இவர் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

  ஸ்வப்னா சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிடுகிறது. விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் உருவாகிவுள்ள இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


  சீதா ராமம்

  தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகிவுள்ளது. அதில், காஷ்மீர் ராணுவத்தில் பணிபுரியும் ராம் (துல்கர் சல்மான்) தனக்கு கடிதம் எழுத யாருமே இல்லை என்ற தகவலை வானொலி மூலம் தெரிவிக்கிறார். அதன்பின்னர், அவருக்கு ஏராளமான கடிதங்களை பொதுமக்கள் எழுதுகிறார்கள். அதில், சீதா மகாலஷ்மி என்ற ஒரு பெண் நீங்கள் தாலி கட்டிய மனைவி நான் இருக்கிறேன் என்று ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தை படித்துவிட்டு ஆச்சர்யமடையும் துல்கர் சல்மான், சீதா நீ யார்? என்று கேட்கிறார். இவ்வாறு இந்த டீசர் முடிகிறது.

  சமீபத்தில் 'சீதா ராமம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மக்களிடையே வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது இப்படத்தின் டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.  Next Story
  ×