search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்.. சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த லீனா மணிமேகலை
    X

    லீனா மணிமேகலை

    அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்.. சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த லீனா மணிமேகலை

    • லீனா மணிமேகலையின் ஆவணப்படங்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.
    • பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து கவிதைகளை எழுதியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் பல ஆவணப்படங்களை இயக்கியதன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய ஆவணப்படங்களுக்கு பல விருதுகள் கிடைத்தன. இவரின் பறை, தேவதைகள், பலிபீடம் போன்ற பல ஆவணப்படங்கள் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் சாதிய ஒடுக்குமுறை பற்றி இவர் இயக்கிய மாடத்தி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளையும் வென்றது. கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் இவர் சாதிய ஒடுக்குமுறைகள், பெண்களுக்கான உரிமைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பல கவிதைகளை எழுதியுள்ளார்.

    காளி

    லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    லீனா மணிமேகலை - காளி

    இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து இயக்குனர் லீனா மணிமேகலை சமூக வலைத்தளத்தின் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா "arrest leena manimekalai" hashtag போடாம "love you leena manimekalai" hashtag போடுவாங்க என லீனா தெரிவித்துள்ளார்.

    மற்றொரு பதிவில், "எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்" என லீனா தைரியமாக குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×