search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    முன்னதாக வெளியாகும் புல்லட் டிரெய்ன் திரைப்படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
    X

    புல்லட் டிரெய்ன்

    முன்னதாக வெளியாகும் புல்லட் டிரெய்ன் திரைப்படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

    • இயக்குனர் டேவிட் லீட்ச் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "புல்லட் டிரெய்ன்".
    • இப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

    டெட்பூல் 2 இயக்குனர் டேவிட் லீட்ச் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "புல்லட் டிரெய்ன்". இந்த திரைப்படத்தில், முதன்மை கதாபாத்திரத்தில் பிராட் பிட் நடிக்க, ஜோய் கிங், பிரையன் டைரி ஹென்றி, ஆரோன் டெய்லர்-ஜான்சன், கரேன் ஃபுகுஹாரா, லோகன் லெர்மன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    புல்லட் டிரெய்ன்

    இப்படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா நிறுவனம் "புல்லட் டிரெய்ன்" திரைப்படத்தை உலகளாவிய வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறது.


    புல்லட் டிரெய்ன்

    உலக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி நகைச்சுவை கலந்த "புல்லட் டிரெய்ன்" திரைப்படம் இந்தியாவில் முன்னரே வெளியாவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Next Story
    ×