என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    என்னடா படம் எடுக்குறாங்க இப்ப.. புதிய அப்டேட் கொடுத்த அருண் விஜய் படக்குழு
    X

    அருண் விஜய்

    என்னடா படம் எடுக்குறாங்க இப்ப.. புதிய அப்டேட் கொடுத்த அருண் விஜய் படக்குழு

    • அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் தமிழ் ராக்கர்ஸ்.
    • இந்த தொடரில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெப்தொடர் தமிழ் ராக்கர்ஸ். இந்த தொடரில் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த தொடரை மனோஜ் குமார் கலைவாணன் எழுத ஏவிஎம் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

    தமிழ் ராக்கர்ஸ்

    இந்த வெப்தொடர் வருகிற 19-ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் வீடியோ போன்று அமைந்துள்ள இந்த வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அதில், "என்னடா படம் எடுக்குறாங்க இப்ப...என்ன சொல்றாங்க, என்ன பண்றாங்கனே தெரியமாட்டிங்குது போன்ற வசனங்கள் இடம்பெற்றிருக்கிறது.



    Next Story
    ×