என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிப்ரவரி வெளியாகும் சுசீந்திரனின் 2K Love Story
    X

    பிப்ரவரி வெளியாகும் சுசீந்திரனின் 2K Love Story

    • சுசீந்திரன் இயக்கி உள்ள படம் '2K லவ் ஸ்டோரி'. இப்படத்தில் கதாநாயகனாக ஜெகவீர் அறிமுகமாகி உள்ளார்.
    • இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

    சுசீந்திரன் இயக்கி உள்ள படம் '2K லவ் ஸ்டோரி'. இப்படத்தில் கதாநாயகனாக ஜெகவீர் அறிமுகமாகி உள்ளார். மேலும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன் , அந்தோணி பாக்யராஜ் , ஜெயப்பிரகாஷ் , வினோதினி வைத்தியநாதன், ஜி. பி. முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சுசீந்திரன் - இமான் இணைந்துள்ள 10-வது திரைப்படம் இதுவாகும்.

    2K தலைமுறையின் காதல், நட்பு என அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாகி உள்ளது. மேலும், வெட்டிங் போட்டோகிராபி எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் சென்னையில் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தின் டீசர் -ட்ரெய்லர்- பாடல்கள் -ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    இதையடுத்து வருகிற 10-ந்தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன் இப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×