மதராஸி படத்தின் சலம்பலா வீடியோ பாடல் நாளை வெளியாகிறது..!

படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
மதராஸி படத்தின் சலம்பலா வீடியோ பாடல் நாளை வெளியாகிறது..!
Published on

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

படம் ரிலீஸ் ஆன நிலையில் தங்கபூவே வீடியோ பாடலை கடந்த 8ஆம் தேதி படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் சலம்பலா வீடியோ பாடலை நாளை 10 மணிக்கு படக்குழு வெளியிடுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com