என் மலர்
சினிமா செய்திகள்

ரியோ ராஜ் நடிக்கும் ஆண்பாவம் பொல்லாதது பட ரிலீஸ் அப்டேட் !
- ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.
2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ''ஜோ'' திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து ''ஜோ'' பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் ஆண் பாவம் பொல்லாதது. இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.
இச்சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் முதல் பாடலான ஜோடி பொருத்தம் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்நிலையில் படத்தின் டீசரை கூலி திரைப்பட இடைவேளியின் போது திரையரங்குகளில் ஒளிப்பரப்பாகி வருகிறது. மேலும் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.
ஸ்வீட் ஹார்ட் திரைப்படத்தை தொடர்ந்து இப்படமும் வெற்றி திரைப்படமாக ரியோவிற்கு அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.






