என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ் சினிமாவில் புதிய அவதாரத்தில் பிரதீப்
    X

    தமிழ் சினிமாவில் புதிய அவதாரத்தில் பிரதீப்

    • விரைவில் ‘LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) படம் வெளியாக உள்ளது.
    • சம்பளம் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    தமிழ் சினிமாவில் இயக்குநராக ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'டியூட்' படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்தது. இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் விரைவில் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) படம் வெளியாக உள்ளது.

    இதனிடையே, பிரதீப் ரங்கநாதன் ஆரம்பத்தில் வாங்கிய சம்பளமும், தற்போதும் வாங்கும் சம்பளம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில், நடிப்பு மற்றும் இயக்குநரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் புதிய பாதையில் பிரதீப் ரங்கநாதன் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன் படி, பிரதீப் ரங்கநாதன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி புதிய மற்றும் வளர்ந்து வரும் திறமையாளர்களை சினிமாத்துறைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் கதை பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் இந்த படத்தில் மமிதா பைஜூ நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×