என் மலர்
சினிமா செய்திகள்

Nagabandham | ஆன்மீக பாடலாக வெளியானது நாகபந்தம் ஃபர்ஸ்ட் சிங்கிள்
`கூத்தாச்சாரி' மற்றும் `டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்' போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்தவர் அபிஷேக் நாமா. தற்போது இவர் தனது அபிஷேக் பிக்சர்ஸ்-இன் "புரொடக்சன் 9" ஆக உருவாகும் `நாகபந்தம்' எனும் திரைப்படத்தை, தண்டர் ஸ்டுடியோஸ் சார்பில் மதுசூதன் ராவ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.
கே.ஜி.எப். புகழ் அவினாஷ் நடிப்பில் உருவாகும் "நாகபந்தம்" திரைப்படத்திற்கு சௌந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்ய, அபே இசையமைக்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதியுள்ளார், ஆர்.சி. பிரனாவ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அசோக் குமார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
நாகபந்தம் ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது. இந்தப் படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், நாகபந்தம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் "நமோ ரே" வெளியிடப்பட்டுள்ளது. ஆன்மிக பாடலாக உருவாகி இருக்கும் "நமோ ரே" பிரமாண்ட காட்சிகளை கொண்டிருக்கிறது.






