முனீஷ்காந்த் - விஜயலட்சுமி இணையும் "மிடில் கிளாஸ்" மோஷன் போஸ்டர் வெளியீடு!

ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி, தனது புதிய படமான “மிடில் கிளாஸ்”-இன் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
முனீஷ்காந்த் - விஜயலட்சுமி இணையும் "மிடில் கிளாஸ்" மோஷன் போஸ்டர் வெளியீடு!
Published on

தமிழ் சினிமாவில் ராட்சசன், ஓ மை கடவுளே, மரகத நாணயம், பேச்சுலர் போன்ற படங்களைத் தயாரித்த ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி, தனது புதிய படமான "மிடில் கிளாஸ்"-இன் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குநரான கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார்.படத்தில் முனீஷ்காந்த், விஜயலட்சுமி அகத்தியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ராதா ரவி, மாளவிகா அவிநாஷ், வடிவேல் முருகன், குரைஷி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படம் 2022-ல் படப்பிடிப்பைத் தொடங்கியது. ஆரம்பத்தில், இந்தப் படம் KJR Studios மற்றும் கௌஸ்துப் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு: சுதர்ஷன் ஸ்ரீநிவாசன்

எடிட்டிங்: சான் லோகேஷ்

இசை: பிரணவ் முனிராஜ்

திரைப்படம் இந்தாண்டு வெளியாக இருக்கிறது. முனீஷ்காந்த் இந்த ஆண்டு பெருசு, கேங்கர்ஸ், படைத் தலைவன், ஜென்ம நட்சத்திரம், சரண்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். விஜயலட்சுமி அகத்தியன், கடைசியாக 2023-ல் இறைவன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com