என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பைசன் டிரெய்லர் தொடர்ந்து தாமதம்..! மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ்
    X

    "பைசன்" டிரெய்லர் தொடர்ந்து தாமதம்..! மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ்

    பைசன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    படம் வெளியாவதற்கு இன்றும் 4 நாட்களே உள்ள நிலையில் இன்று 6 மணிக்கு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என இயக்குநர் மாரிசெல்வராஜ் போஸ்டரை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

    கடந்த 10-ந் தேதி வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக அமீர், துருவ் விக்ரம் மற்றும் லால் ஆகியோர் இருக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டு டிரெய்லர் 13- ந் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்தது.

    இன்று மாலை 6 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என போஸ்டர் வெளியிடப்பட்டது. பின்னர் 7 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியானது.

    இந்நிலையில், பைசன் படத்தின் டிரெய்லர் இன்று இரவு 8 மணிக்கு நடிகர் ராணா தகுபதி வெளியிட உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    இதற்கிடையே, பைசன் டிரெய்லர் தள்ளிப்போவதற்கு மன்னிப்பு கோரி இயக்குனர் மாரி செல்வராஜ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில்," தவிர்க்க முடியாத காரணங்களால் டிரெய்லர் ஒரு மணி நேரம் தாமதமாகிறது. இந்த நேர தாமதத்திற்கு மிகவும் வருந்துகிறேன்! பைசன் டிரெய்லர் இன்று இரவு 8 மணிக்கு.." என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×