கேரள மாநில திரைப்பட விருது அறிவிப்பு: மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு 9 விருது- சிறந்த நடிகர் மம்மூட்டி

மம்மூட்டி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மஞ்சுமல் பாய்ஸ் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது.
கேரள மாநில திரைப்பட விருது அறிவிப்பு: மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு 9 விருது- சிறந்த நடிகர் மம்மூட்டி
Published on

2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 55ஆவது திரைப்பட விருது பட்டியலை கலாசார விவகாரத்துறை அமைச்சர் சஜி செரியன் அறிவித்தார்.

மம்மூட்டி சிறந்த நடிகராகவும், ஷாம்லா ஹம்சா சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மலையாள சினிமாவில் வசூலை வாரிக் குவித்த மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம், சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பிரம்மயுகம் படத்தில் நடித்ததற்காக மம்மூட்டி சிறந்த நடிகராகவும், பெமினிசி பாத்திமா படத்தில் நடித்ததற்காக புதுமுகமான ஷாம்லா ஹம்சா சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மஞ்சுமல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை விருதை வென்றுள்ளார். மொத்தமாக 9 விருதுகளை வென்றுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com