சத்ய ஜோதி பிலிம்ஸ்-இன் புதிய படத்தில் மஹத் ராகவேந்திரா

இந்தப் படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.தெலுங்கில் உருவாகும் "பகாசல பந்தம்" திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்.
சத்ய ஜோதி பிலிம்ஸ்-இன் புதிய படத்தில் மஹத் ராகவேந்திரா
Published on

நடிகர் மஹத் ராகவேந்திரா தனது திரைப்பயணத்தில் அற்புதமான படத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் இயக்கும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் உடன் இணைந்து மஹத் ராகவேந்திரா பணியாற்றவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மஹத் ஏற்கனவே சில பெரிய கூட்டணிகளைக் கொண்டுள்ள நிலையில், இது அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. தமிழ் திரையுலகில் பிரபல திரைப்பட நிறுவனங்களில் ஒன்று சத்ய ஜோதி ஃபிலிம்ஸ். நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள், முன்னணி நடிகர்களின் பெரிய படங்கள் மூலம் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படுகிறது.

புகழ்பெற்ற சத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் மஹத் ராகவேந்திரா இணைந்து பணியாற்றுவது திரைத்துறை வட்டாரங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரங்கள் மற்றும் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் மஹத் ராகவேந்திரா. நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிகிறார். அந்த வரிசையில், இந்த கூட்டணி அவரது திரைப்பட வரலாற்றில் மற்றொரு குறிப்பிடத்தக்க கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மஹத் ராகவேந்திரா தற்போது தெலுங்கு மொழியில் உருவாகும் "பகாசல பந்தம்" திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தில் மஹத் ஸ்வர்யா ராஜேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்பட முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறார். இந்தப் படம் குடும்ப பொழுதுபோக்கு படமாகும். பிறந்தநாளை ஒட்டி நடிகர் மஹத் ராகவேந்திராவின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com