2026 கிராமி விருதுகள்: Best Pop Vocal Album விருது வென்ற லேடி காகா

சமீபத்திய ஆல்பம் மேஹெம் (Mayhem) இந்த விருதை பெற்றுள்ளது.இங்கே நிற்பது எனக்கு மிகப் பெரிய மரியாதை.
2026 கிராமி விருதுகள்: Best Pop Vocal Album விருது வென்ற லேடி காகா
Published on

பாப் இசை உலகின் முன்னணி நட்சத்திரம் லேடி காகா. இவரது பாடல்கள் உலகம் முழுக்க மிகவும் பிரபலம். இந்த நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளில் 'சிறந்த பாப் வோக்கல் ஆல்பம்' என்ற பிரிவில் லேடி காகா விருது வென்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவரது சமீபத்திய ஆல்பம் மேஹெம் (Mayhem) இந்த விருதை பெற்றுள்ளது.

இந்தப் பிரிவில் ஜஸ்டின் பீபரின் 'Swag', மைலி சைரஸின் 'Something Beautiful', டெடி ஸ்விம்ஸின் 'I've Tried Everything but Therapy (Part 2)' மற்றும் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற சப்ரினா கார்பெண்டரின் 'Man's Best Friend' ஆகிய படைப்புகளைத் தாண்டி லேடி காகா இந்த விருதை கைப்பற்றினார்.

விருதை பெற்ற பின் மேடையில் பேசிய லேடி காகா, "இங்கே நிற்பது எனக்கு மிகப் பெரிய மரியாதை. நான் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே இசை செய்து வருகிறேன். இங்கு வந்த ஒவ்வொரு முறையும், இன்னும் கனவா நிஜமா என்று நான் என்னை தட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இங்குள்ள அனைவரையும் நான் மிகுந்த மரியாதையுடன் பார்க்கிறேன். முதலில் என் துணைவர் மைக்கேலுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த ஆல்பத்திற்காக முழு ஆண்டும் என்னுடன் உழைத்தீர்கள். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்," என்று அவர் கூறினார்.

"இசைத்துறையில் உள்ள பெண்களிடம் நான் சொல்ல விரும்புவது ஒன்று தான். சில நேரங்களில், பல ஆண்கள் இருக்கும் ஸ்டுடியோக்களில் உங்களது கருத்துகளை வெளிப்படுத்துவது கடினமாக இருக்கலாம். ஆனால், உங்களை நம்புங்கள். உங்கள் யோசனைகளுக்காக போராடுங்கள். உங்கள் குரல் அனைவருக்கும் தெளிவாக கேட்கும் வகையில் இருக்க வேண்டும்," என அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com