60 நாட்களில் படப்பிடிப்பை முடித்த கென் கருணாஸ்

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும்.
60 நாட்களில் படப்பிடிப்பை முடித்த கென் கருணாஸ்
Published on

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'நெடுஞ்சாலை' படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து 'அசுரன்', 'விடுதலை-2' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே, நடிகர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

இந்த நிலையில், கென் கருணாஸ் இயக்கி வந்த முதல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கென் கருணாஸ் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு 'காதலன்' என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஸ்ரீதேவி, அனிஷ்மா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து 60 நாட்களில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

இதனால் விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com