என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா 28-ந்தேதி ரிலீஸ்
    X

    கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா 28-ந்தேதி ரிலீஸ்

    கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது.

    கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்துவிட்டது. இப்படத்தின் பெயர் டீசர் வெளியாகி, படமும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகாமல் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    கதை நாயகியாக ரகு தாத்தா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் சரியாக ஓடவில்லை. இந்த நிலையில் ரிவால்வர் ரீட்டாவின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

    Next Story
    ×