அப்படியே அப்பாவின் முகஜாடை..!- குழந்தை குறித்து ஜாய் கிரிசில்டாவின் லேட்டஸ்டு பதிவு

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக பதிவிட்டிருந்தார்.
அப்படியே அப்பாவின் முகஜாடை..!- குழந்தை குறித்து ஜாய் கிரிசில்டாவின் லேட்டஸ்டு பதிவு
Published on

தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து, தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் குழந்தையின் முகம் மறைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், ஜாய் கிரிசில்டாவின் விரலை தனது குழந்தை பிடித்திருப்பது போன்று உள்ளது.

ஜாய் கிரிசில்டா அந்த புகைப்படத்துடன் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில்,"கார்பன்காபி ஆப் ஹிஸ் பார்தர் பேஸ்" என குறிப்பிட்டுள்ளார். அதாவது, அப்பாவின் முக ஜாடையை அப்படியே உரித்து வைத்திருப்பதாக ஜாய் கிரிசில்டா குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com