என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    66 வயதில் நீனா குப்தா கர்ப்பமா? | Neena Gupta
    X

    66 வயதில் நீனா குப்தா கர்ப்பமா? | Neena Gupta

    • விழாவில் நீனா குப்தாவும் அவரது கணவரும் ஜோடியாக நின்றபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
    • 66 வயது நிரம்பிய நீனா குப்தா கர்ப்ப செய்தி காட்டு தீ போல ஊரெங்கும் பரவியது.

    பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையான நீனா குப்தா கணவருடன் ஐதராபாத்தில் நடந்த ராஷ்மிகா -விஜய் தேவரகொண்டா திருமண விழாவில் பங்கேற்றார்.

    விழாவில் நீனா குப்தாவும் அவரது கணவரும் ஜோடியாக நின்றபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.

    இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. படத்தில் நீனா குப்தா வயிற்றை பார்த்த பலர் நீனா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்ப தொடங்கினர்.

    66 வயது நிரம்பிய நீனா குப்தா கர்ப்ப செய்தி காட்டு தீ போல ஊரெங்கும் பரவியது. இதற்கு பதில் அளித்த நீனா குப்தா அப்படி எதுவும் இல்லை.

    திருமண விழாவில் நான் அணிந்திருந்த சேலையின் துணி கொஞ்சம் தடிமனாக இருந்தது. அதனால் நான் குண்டாக தெரிந்தேன். ஆனால் ஒன்னு... இந்த வயதில் மக்கள் என் கர்ப்பத்தை பற்றி இவ்வளவு அதிகமாக விவாதிப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

    Next Story
    ×