சொகுசு காரில் வரவில்லை என்றால் மதிக்க மாட்டார்கள்.. பாலிவுட் திரைத்துறை குறித்து துல்கர் சல்மான் ஓபன் டாக்

அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் உட்கார ஒரு நாற்காலி கூட கொடுக்க மாட்டார்கள்பெரும்பாலான பொருட்களை வீட்டிலிருந்தே கொண்டு வருகிறோம்"
சொகுசு காரில் வரவில்லை என்றால் மதிக்க மாட்டார்கள்.. பாலிவுட் திரைத்துறை குறித்து துல்கர் சல்மான் ஓபன் டாக்
Published on

பாலிவுட் திரைத்துறை மற்றும் மலையாள திரைத்துறை இடையே உள்ள வித்தியாசம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் முக்கிய கருத்துக்களை பேசியுள்ளார்.

சமீபத்திய பேட்டியில் பேசிய துல்கர் சல்மான் "நான் பாலிவுட்டில் நடித்தபோது, நான் ஒரு நட்சத்திரம் என்று அனைவரையும் நம்ப வைக்க வேண்டியிருந்தது. என்னைச் சுற்றி எப்போதும் இரண்டு பேர் இருந்தார்கள். நாங்கள் ஒரு சொகுசு காரில் வந்தால் மட்டுமே அவர்கள் எங்களை நட்சத்திரங்களாக அங்கீகரித்தார்கள்.

இல்லையெனில், அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் உட்கார ஒரு நாற்காலி கூட கொடுக்க மாட்டார்கள், மானிட்டரைப் பார்க்க ஒரு இடத்தைக் கூட ஒதுக்க மாட்டார்கள்" என்று கூறினார்.

அதே நேரம் மலையாள திரைத்துறை குறித்து பேசிய துல்கர் சல்மான், எங்கள் துறையில், படங்களுக்கு அதிக செலவு இல்லை. இங்கு யாரும் ஆடம்பரத்திற்கு முன்னுரிமை அளிப்பதில்லை. நாங்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துகிறோம். பெரும்பாலான பொருட்களை வீட்டிலிருந்தே கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.

துல்கர் சல்மான் 2018 இல் இர்பான் கான் உடன் 'கர்வான்' படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகி இருந்தார்.

கடைசியாக கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாழ்க்கை வராலாற்று படமான 'காந்தா' படத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com